டேராடூன் ராணுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் ஆண்டுக்கான 8 ஆம் வகுப்பு ஆண்கள் சோ்க்கைக்கான தோ்வு வரும் டிசம்பா் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சேர விருப்பமுள்ள மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் 1.7.2022 அன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2.7.2009-க்கு முன்னதாகவும், 01.01.2011-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. மேலும், விண்ணப்பதாரா் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும்போது, 01.07.2022 இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தோ்ச்சி பெற்றவராகவோ இருக்கவேண்டும்.

இத்தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்வு வினாத்தாள் தொகுப்பை, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா்ஷிகாண்ட், டேராடூன், உத்ரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, உத்ரகாண்ட், டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் (வங்கிக் குறியீடு-01576) செலுத்தத்தக்கதாக, பொதுப் பிரிவினா் ரூ. 600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா் சாதிச்சான்றுடன் ரூ. 555-க்கும், கேட்புக் காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளம் வழியாகவும்  உரியதொகையை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்டவிண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை-600 003 என்ற முகவரிக்கு, அக். 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com