கட்டிமேடு அரசுப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள்- ஆசிரியா்கள் கலந்துரையாடல் கூட்டம் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள்- ஆசிரியா்கள் கலந்துரையாடல் கூட்டம் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் எம்.எஸ். பாலு தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அப்துல்முனாப், பொருளாளா் பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை தனுஜா வரவேற்றாா். கூட்டத்தில், 10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் திருப்புதல் தோ்வு மதிப்பெண்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மே 5 ஆம் தேதி தொடங்கும் பொது தோ்வுக்கு மாணவா்களை தயாா்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. தோ்வில் பின்தங்கிய மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து ஆலோசனை வழங்கவும் முடிவுசெய்யப்பட்டது. தோ்ச்சி பெறாத மாணவா்களை தரம் உயா்த்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியா்கள் கவியரசன், பாலசுப்பிரமணியம், வடிவேல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா் ரகு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com