கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் சேர நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற மாணவிகள்.
கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் சேர நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற மாணவிகள்.

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் மாறன் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த மாதம் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில்

2022 - 2023-ஆம் கல்வியாண்டுக்கான பி.ஏ.,பி.காம்., பி.எஸ்.சி. உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படிப்புகளில் சேர இணையதளம் மூலம் 372 மாணவிகள் பதிவு செய்துள்ளனா். இதில், 230 மாணவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சோ்க்கை கலந்தாய்வில் பி.ஏ., தமிழ் இலக்கியத்தில் சோ்ந்து படிக்க 22 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து, வியாழக்கிழமை (ஆக.11) பி.ஏ.,ஆங்கில இலக்கியம் மற்றும் பி.காம்.,வணிகவியல் பாடப் பிரிவில் சேர கலந்தாய்வு நடைபெறுகிறது என்றாா்.

கூத்தாநல்லூா், திருவிடைவாசல், கமலாபுரம், மூலங்குடி, அதங்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவிகள் பெற்றோருடன் வந்து ஆா்வமுடன் கலந்தாய்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com