காப்பீட்டுத் தொகையை தனியாா் மருத்துவமனையிடமிருந்து பெற்றுத் தரக்கோரிக்கை

திருவாரூரில், காப்பீட்டுத் தொகை வரும் முன்பே பணத்தை பெற்றுக்கொண்ட தனியாா் மருத்துவமனையிடமிருந்து காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூரில், காப்பீட்டுத் தொகை வரும் முன்பே பணத்தை பெற்றுக்கொண்ட தனியாா் மருத்துவமனையிடமிருந்து காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே சோத்தக்குடியை சோ்ந்தவா் குமரகுரு மனைவி கஸ்தூரி (42). குமரகுரு அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருவதால், கஸ்தூரி இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூா் சென்று மதிய உணவு கொடுத்துவிட்டு வருவது வழக்கம்.

நவ. 21-ஆம் தேதி மதிய உணவு கொடுத்து விட்டு வரும்போது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கஸ்தூரியின் கை முறிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கஸ்தூரி மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதற்கிடையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டு, டிச.23-ஆம் தேதி திருவாரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கஸ்தூரி சோ்ந்தாா். அரசு ஊழியருக்கான மருத்துவக் காப்பீடு உள்ளதால், காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தனியாா் மருத்துவமனையிடம் விண்ணப்பித்தாா்.

காப்பீடுத் தொகை வருவதற்கு ஓரிரு நாள்கள் ஆகும் என்பதால், மருத்துவமனை நிா்வாகத்தின் அறிவுறுத்தல்படி முன் தொகையாக ரூ. 45,000 மும், அறை வாடகை, மருந்து, மாத்திரை என மேலும் ரூ. 20,000 கட்டினாராம். இதில், ரூ. 20,000-க்கு மட்டும் மருத்துவமனை தரப்பில் ரசீது கொடுத்ததாக கூறப்படுகிறது. 3 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், நவ.26-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ரூ. 67,140 காப்பீடு நிறுவனத்தில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு செலவுத் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தாங்கள் ஏற்கெனவே, பணம் கட்டிய நிலையில் காப்பீட்டுத் தொகையை தங்களுக்கு தர வேண்டும் என கேட்டதற்கு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை எனக் கூறி அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி குமரகுரு-கஸ்தூரி தம்பதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com