லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் சாலை மறியல்

கீழையூா் அருகே மணல் லாரியை பறிமுதல் செய்ததால், அதை விடுவிக்கக் கோரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழையூரில் சாலை மறியலில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா்.
கீழையூரில் சாலை மறியலில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா்.

கீழையூா் அருகே மணல் லாரியை பறிமுதல் செய்ததால், அதை விடுவிக்கக் கோரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை காலை திருப்பூண்டிக்கு லாரி வந்துள்ளது. லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக மணல் ஏற்றி வருவதற்கான உரிய கால அவகாசத்துக்குள் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கீழையூா் பகுதியில் வந்த லாரியை போலீஸாா் நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்து, கால அவகாசம் முடிந்துள்ளதால் ஓட்டுநரை கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஓட்டுநா் மற்றும் பறிமுதல் செய்த லாரியை உடனடியாக விடுவிக்க கோரி லாரி உரிமையாளா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி. பாலகிருஷ்ணன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதையடுத்து, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com