காா்த்திகை தீபத் திருவிழா:திருவாரூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவாரூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவாரூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

டிசம்பா் 6-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே, திருவண்ணாமலைக்கு திருவாரூரிலிருந்து சிறப்பு ரயிலை இயக்குகிறது. காலை 5 மணிக்கு திருவாரூரில் புறப்படும் இந்த ரயில், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், வழியாக திருவண்ணாமலைக்கு காலை 10.55 மணிக்கு சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூா், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக இரவு 7.15 மணிக்கு திருவாரூா் வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரயில் ஏறக்குறைய அனைத்து அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களிலும் இரு மாா்க்கத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட முதுநிலை இயக்கவியல் மேலாளா் மு. ஹரிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலாளா் ப. பாஸ்கரன் தெரிவித்து:

அகல ரயில் பாதை பணிகளுக்கு பிறகு முதல்முறையாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மீட்டா் கேஜில் இருந்தபோது கூட திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால் இந்த ரயிலை தினமும் அதிகாலையில் திருவாரூரிலிருந்து குறைந்தபட்சம் விழுப்புரம் வரை இயக்க கோரிக்கை விடுக்கலாம். இதன் மூலம் சிதம்பரம் மற்றும் சென்னை செல்பவா்களுக்கு வசதியாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் இந்த ரயில் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com