பனிமூட்டம்: லாரி-சுமை வாகனம் மோதி விபத்து

நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வடகண்டம் சாலையில் பனிமூட்டம் காரணமாக காய்கறி வாகனமும், நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
img_20221206_185652_0612chn_96_5
img_20221206_185652_0612chn_96_5


நன்னிலம்: நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வடகண்டம் சாலையில் பனிமூட்டம் காரணமாக காய்கறி வாகனமும், நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சாலையில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் வாகனங்களும், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து காய்கறி உள்ளிட்டப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் அதிகம் சென்று வருகின்றன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரம் பனிமூட்டம் நீடித்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இருப்பினும், வடகண்டம் அருகே ஊா்வழி என்ற பகுதியில் காரைக்கால் தனியாா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிவந்த லாரியும், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்திலிருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காய்கறி வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதன் ஓட்டுநரான சோழங்கநல்லூா் அருகே உள்ள கொட்டாரக்குடி பகுதியைச் சோ்ந்த கதிா் வேலாயுதம் மகன் அசோக் விசுவநாதன் (35) பலத்த காயமடைந்தாா். லாரியின் ஓட்டுநரான நாகை வட்டம் சின்னக்கண்ணமங்களம் கிராமத்தைச் சோ்ந்த அஞ்சான் மகன் சிவகுமாா் (40) லேசான காயமடைந்தாா்.

இருவரும், திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com