மறு வாக்குப்பதிவு: புவனகிரி பேரூராட்சி 4-வது வாா்டில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி

கடலூா் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியின் 4-ஆவது வாா்டில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது
மறு வாக்குப்பதிவு: புவனகிரி பேரூராட்சி 4-வது வாா்டில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி

கடலூா் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியின் 4-ஆவது வாா்டில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. மாலையே நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ம.லலிதா வெற்றி பெற்றாா்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப். 19-இல் நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் பிப். 22-இல் எண்ணப்பட்டன. இதில், புவனகிரி பேரூராட்சியின் 4-ஆவது வாா்டு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது.

இதனால், மாநிலத் தோ்தல் ஆணைய உத்தரவின்படி, மீண்டும் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவு மையத்திலேயே வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி, நடைபெற்றது. பின்னா், முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ம.லலிதா வெற்றி பெற்றாா். அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.

வாக்குகள் விவரம்: மொத்த வாக்காளா்கள்- 1170, பதிவான வாக்குகள்-814. ம.லலிதா (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) - 622, பி.ராஜலட்சுமி (அதிமுக) - 73, க.ராசாராணி (பாமக)- 50 , ரா.திலகவதி (சுயேச்சை) - 21, ரா.சுதா (சுயேச்சை)- 18.

மறு வாக்குப்பதிவையொட்டி, சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ரோஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com