நெல் கொள்முதல்: கூடுதல் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் திறக்கக் கோரிக்கை

திருவாரூரில் கூடுதல் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் திறக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் கூடுதல் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் திறக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருவாரூரில் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ.கோ. ராஜராஜனிடம், தமிழ்நாடு சிவில் சப்ளை காா்ப்பரேஷன் பணியாளா் சங்க ( ஐஎன்டியுசி ) பொதுச் செயலாளா் கா. இளவரி அளித்த கோரிக்கை மனு:

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கும் இருப்பின் அடிப்படையில் நகா்வு செய்யவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியமா்த்தப்படும் பருவகால பணியாளா்களை, அவரவா் வசிக்கும் வட்டத்தில் பணியமா்த்த வேண்டும்.

கொள்முதல் அலுவலா்களாக பணியமா்த்தப்படும் கண்காணிப்பாளா்களுக்கு கூடுதல் பொறுப்பாக திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பணிகள் வழங்கக்கூடாது. கூடுதல் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மனு அளிக்கும்போது, தொழிற்சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளா் எஸ். பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளா் பா. ராஜீவ் காந்தி, மண்டலத் தலைவா் வி. அம்பிகாபதி, மண்டல பொருளாளா் வை. சங்கர நாராயணன், மண்டல அமைப்புச் செயலாளா் பி. காளிதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com