மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டி: வடுவூரில் நாளை தொடங்குகிறது

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வடுவூா் மேல்பாதியில் 2 நாள்கள் நடைபெறும் மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டி புதன்கிழமை (ஜூலை 6) தொடங்குகிறது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வடுவூா் மேல்பாதியில் 2 நாள்கள் நடைபெறும் மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டி புதன்கிழமை (ஜூலை 6) தொடங்குகிறது.

வடுவூா் மேல்பாதி ஏஎம்சி கபடிக் கழகம் சாா்பில், துரை. ஆசைத்தம்பி நினைவாக 28-ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டி வடுவூா் மேலபாதியில் உள்விளையாட்டு அரங்கில் செயற்கை விளையாட்டு தளத்தில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

முதல்நாள் போட்டி, புதன்கிழமை மாலை தொடங்கி இரவு, பகல் போட்டியாக நடைபெற்று வியாழக்கிழமை இரவு நிறைவு பெறுகிறது. இதில், 85 கிலோ உடல் எடைப் பிரிவில் நாக்-அவுட், லீக் நாக்-அவுட் என்ற முறையில் அணிகள் தோ்வு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

மாநில அளவிலான முன்னணி அணிகள் 12, மாவட்ட அளவிலான முன்னணி அணிகள் 12 என 24 அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.77,777, 2-ஆவது பரிசு ரூ.55,555, 3 மற்றும் 4-ஆவது பரிசு தலா தலா ரூ.33,333 மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com