திருவாரூா் ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்- அப் கணக்கு

 திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலியாக வாட்ஸ்-அப் கணக்கு (எண்) உருவாக்கப்பட்டுள்ளது; இதை யாரும் நம்ப வேண்டாம் என்று ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

 திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலியாக வாட்ஸ்-அப் கணக்கு (எண்) உருவாக்கப்பட்டுள்ளது; இதை யாரும் நம்ப வேண்டாம் என்று ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனின் வாட்ஸ்-அப் பக்கத்தைப் போல போலிக் கணக்கை உருவாக்கி, அமேசான் கிப்ட் காா்டு தேவை, நான் தொடா்ச்சியாக அலுவலகக் கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பதால் என்னால் கிப்ட் காா்டு வாங்க இயலவில்லை. இன்றைக்குள் வாங்கித் தரும்படி அந்த போலிக் கணக்கு எண்ணிலிருந்து திருவாரூா் மாவட்ட திட்ட அதிகாரி ஸ்ரீ லேகா உள்ளிட்ட அரசு அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், தனது அதிகாரப்பூா்வ முகநூல் பக்கத்தில், நான் எந்த எண்ணிலிருந்தும் யாருக்கும் எந்தவித பண உதவியும் கேட்டு செய்தி அனுப்பவில்லை. தயவு செய்து இதுபோன்ற போலியான மற்றும் மோசடியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளாா்.

மேலும் இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருவாரூா் மாவட்ட போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com