இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

உலக சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு மற்றும் கும்பகோணம் பாமா சுப்பிரமணியம் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

உலக சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு மற்றும் கும்பகோணம் பாமா சுப்பிரமணியம் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன் தலைமை வகித்தாா். வேலுடையாா் கல்வி குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி முகாமை தொடங்கி வைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜே. கனகராஜன் செய்திருந்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com