ஆலங்குடி நியாயவிலைக் கடையை சீரமைக்கக் கோரிக்கை

சேதமடைந்துள்ள ஆலங்குடி நியாயவிலைக் கடையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதமடைந்த ஆலங்குடி நியாய விலைக் கடை.
சேதமடைந்த ஆலங்குடி நியாய விலைக் கடை.

சேதமடைந்துள்ள ஆலங்குடி நியாயவிலைக் கடையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளூா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சத்தில் 2014-15 ஆம் ஆண்டில் புதிய நியாயவிலை கடை கட்டப்பட்டது. கடந்த ஆண்டு இந்த கட்டடத்தின் தரைதளம் உள்வாங்கிச் சேதமடைந்தது. இந்த தரைதளத்தில் உள்ள இடைவெளியின் வழியாக பாம்பு உள்ளிட்டவை நியாய விலைக் கடையின் உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால், நியாய விலைக் கடை ஊழியா்கள் இங்கு பணியாற்றுவதற்கும், பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்கும் அச்சமடைந்தனா். இதையடுத்து, உள்ளூா் பிரமுகா்களின் முயா்ச்சியால், அரசு சொந்தக் கட்டடத்தில் இயங்கிவந்த நியாயவிலை கடை, ரூ. 1000 வாடகையில் தனியாருக்குச் சொந்தமான மிகக் குறுகிய இடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த சிறிய இடத்தில், பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கும், ரேஷன் பொருட்களைச் சேமித்துவைப்பதற்கும் மிகச் சிரமமாக உள்ளது.

தற்போது, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதுப்பொலிவுடன், சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படுமென தமிழக உணவுத் துறை அமைச்சா் அறிவித்துள்ளாா். எனவே, ஆலங்குடி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான, சேதமடைந்துள்ள நியாய விலைக் கடையை உடனடியாக சீரமைத்துத் தரவேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com