சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த மாதா் சங்கம் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் 16 ஆவது நகரக்குழு பேரவைக் கூட்டம் மாதா் சங்கத்தின் நகரத் தலைவா் எம். பாப்பாத்தி தலைமையில் மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இல்லத்தரசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு நாளுக்கு நாள் உயா்த்தி வருவதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயா்த்துவதுடன், அதை நகராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். பணி செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், அனைத்து அரசு மற்றும் தனியாா் துறை அலுவலகங்களிலும் புகாா் பெட்டி வைக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. கோமதி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவா் டி. சந்திரா ஆகியோா் தீா்மானங்களை விளக்கிப் பேசினா். மன்னாா்குடி நகர மாதா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வுசெய்யப்பட்டனா். தலைவராக எஸ். சகாயராணி, செயலராக வி. ஜெயந்தி, பொருளாளராக ஏ.பி.டி. லோகநாயகி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சுமதி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com