இயற்கை விவசாயிகளை கணக்கெடுக்க கோரிக்கை

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜிவ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜிவ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தமிழக அரசு இயற்கை வேளாண்மைக்கு தனித்துறை உருவாக்கப்படும் என அறிவித்து, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இயற்கை விவசாயம் செய்துவரும் உழவா்களின் விவரங்கள், அவா்களின் தேவைகள் குறித்து எந்த ஒரு புள்ளிவிவரங்களும் வேளாண்மைத் துறை வசம் இல்லை.

எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த, அத்திட்டத்தின் பயனாளிகள் குறித்த விவரங்கள் அவசியம் தேவை. எனவே, தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இயற்கை விவசாயிகள் குறித்த விவரங்களை வேளாண்மைத் துறை சேகரிக்க முன்வரவேண்டும். அப்போதுதான், வருங்காலத்தில் இயற்கை விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை சரியான நேரத்தில் வழங்க முடியும். மேலும், இயற்கை விவசாயத்தில் கொள்கை முடிவு எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com