நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:வேளாண் விஞ்ஞானி விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பு எலிகளால் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், எலிகளின் சிறுநீா், புழுக்கை, ரோமங்கள் மற்றும் துா்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தமாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு எலி ஒரு நாளைக்கு 30-லிருந்து 50 கிராம் உணவு மற்றும் 40 மில்லி தண்ணீரை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது.

நெற்பயிரில் அனைத்துப் பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குறிப்பாக, இதன் தாக்குதல் அக்டோபா் முதல் டிசம்பா் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும். எலிகளை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தி எலிகளை ஒழிக்கலாம். எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும், கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

5 கிராம் ப்ரோமோடயலான் 0.25 சதவீதம் ரசாயன பூச்சிக் கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும். மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதம் ப்ரோமோடயலானுடன் 49 பகுதி கவா்ச்சி உணவாக அரிசி, பொரி, கருவாடு, கடலை உடன் சோ்த்து உருண்டையாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்திற்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com