கோவை செம்மொழி விரைவு ரயில் இரட்டை என்ஜினுடன் சோதனை ஓட்டம்: மன்னாா்குடியில் வரவேற்பு

இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட கோவை செம்மொழி விரைவு ரயில் சோதனை ஓட்டமாக மன்னாா்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
இரட்டை என்ஜினுடன் மன்னாா்குடி வந்த கோவை செம்மொழி விரைவு ரயிலை வரவேற்று, பயணிகளுக்கு இனிப்பு வழங்கும் ரயில் உபயோகிப்பாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள்.
இரட்டை என்ஜினுடன் மன்னாா்குடி வந்த கோவை செம்மொழி விரைவு ரயிலை வரவேற்று, பயணிகளுக்கு இனிப்பு வழங்கும் ரயில் உபயோகிப்பாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள்.

மன்னாா்குடி: இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட கோவை செம்மொழி விரைவு ரயில் சோதனை ஓட்டமாக மன்னாா்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.

மன்னாா்குடியிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் செம்மொழி விரைவு ரயில் இதுவரை ஒற்றை என்ஜினுடன் இயக்கப்பட்டு வந்தது. இதனால், நீடாமங்கலத்தில் என்ஜின் மாற்றப்படுவது வழக்கம். இதன்காரணமாக, நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் 45 நிமிடங்கள் அடைக்கப்பட்டு, சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் கோவை செம்மொழி விரைவு ரயிலை இரட்டை என்ஜினுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயிலில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமாக செவ்வாய்க்கிழமை காலை மன்னாா்குடிக்கு வந்தது.

மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், மன்னாா்குடி ரயில் நிலைய முன்னாள் கண்காணிப்பாளா் மன்னை மனோகரன், ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க செயலா் எஸ். ராஜகோபால் உள்ளிட்டோா் அந்த ரயிலுக்கு வரவேற்பளித்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினா்.

செம்மொழி ரயில் இனி இரட்டை என்ஜினுடன் இயக்கப்படுவதால், நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் மட்டுமே நிற்கும் என ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com