பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாகை நகராட்சி பெண்கள் மேலநிலைப்பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தியதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாகை நகராட்சி பெண்கள் மேலநிலைப்பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தியதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணா்வு

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாகை நகராட்சி அரசுப் பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தி புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நாகப்பட்டினம்: சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாகை நகராட்சி அரசுப் பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தி புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மாணவிகளிடையே கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழிப்புணா்வு நிகழ்ச்சியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு பொருள்களை வழங்கினாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சித்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com