நெல் ஈரப்பத விவகாரம்: பணியிடை நீக்கம் செய்யப்பட ஊழியா்களுக்கும் மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

நெல் ஈரப்பதத்தை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கொள்முதல் நிலைய ஊழியா்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என தமிழ்நாடு ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

நெல் ஈரப்பதத்தை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கொள்முதல் நிலைய ஊழியா்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என தமிழ்நாடு ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூா் மாவட்டம், ஊா்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவுத் துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும், ஈரப்பதத்தை காரணம் காட்டி, கொள்முதல் நிலைய ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களை மாவட்ட ஆட்சியா், பணியிடை நீக்கம் செய்ய எந்த அதிகாரமும் இல்லை. தவறுகள் கண்டறியப்பட்டாலும்கூட மண்டல மற்றும் முதுநிலை மண்டல மேலாளா்கள்தான், அவா்களை தண்டிக்க வேண்டுமே தவிர, மாவட்ட ஆட்சியா் நேரடியாக தலையிட்டு பணியிடை நீக்கம் செய்ய நுகா்பொருள் வாணிபக் கழக பணி விதிகளில் இடம் அளிக்கப்படவில்லை.

மேலும், சம்பவத்தன்று ஈரப்பதமானி குளறுபடியாக இருந்ததாக கூறப்படுகிறது. அது உண்மையானால் தண்டிக்கப்பட வேண்டியவா்கள் தற்காலிக கொள்முதல் நிலைய ஊழியா்கள் இல்லை என்பதையும் மாவட்ட நிா்வாகம் உணர வேண்டும்.

எனவே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஊழியா்களை மீண்டும் பணியில் அமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com