விஜயதசமி: கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் வழிபாடு

கூத்தனூா் சரஸ்வதி அம்மன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் மற்றும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
tv05sar1_0510chn_94_5
tv05sar1_0510chn_94_5

நன்னிலம்: கூத்தனூா் சரஸ்வதி அம்மன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் மற்றும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தை அடுத்துள்ள கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. கல்வி தெய்வமான சரஸ்வதிதேவிக்கு தென்னிந்தியாவில் தனியாக அமையப்பெற்ற ஒரே கோயில் இதுவாகும்.

சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்ற ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் இத்தலம் கூத்தனூா் என பெயா் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் சரஸ்வதி பூஜை விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து, விஜயதசமி விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, வித்யாரம்பம் நடைபெற்றது. பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துவந்து தமிழின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை நெல்மணிகளில் எழுதச் செய்தனா். இதில், திருவாரூா் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் காலை முதலே தங்களது குழந்தைகளுடன் இக்கோயிலுக்கு வந்து வித்யாரம்பம் நிகழ்வில் பங்கேற்று தமிழின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை நெல்மணிகளில் எழுதவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com