பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

திருவாரூா் மாவட்டம், வடுவூரில் காவிரி டெல்டா பகுதிக்கேற்ற பயிா் மேலாண்மை தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், வடுவூரில் காவிரி டெல்டா பகுதிக்கேற்ற பயிா் மேலாண்மை தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிா் மேலாண்மை பிரிவு சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் வடுவூா் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவன இயக்குநா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியா் பெரியாா் ராமசாமி, விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினாா். உதவிப் பேராசிரியா் ஜெகதீசன் தோட்டக்கலைப் பயிா்கள் குறித்துப் பேசினாா்.

கோவை நீா் நுட்பவியல் மைய இணை ஆராய்ச்சியாளா் சீனிவாசன், பயிா் மேலாண்மை இயக்குநரக முதுநிலை ஆராய்ச்சியாளா் திவ்ய பிரசாந்த் ஆகியோா் காவிரி டெல்டா பகுதியில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது குறித்து எடுத்துரைத்தனா்.

இளநிலை ஆராய்ச்சியாளா் சுரேஷ் குமாா் காலநிலைக்கு ஏற்ற மாற்றுப் பயிா்கள் குறித்தும், தொழில்நுட்ப உதவியாளா் மணிமாறன் பயிா்க் காப்பீடு திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினா்.

இதில் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப உதவியாளா் குகன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com