கூத்தாநல்லூரில் சமுதாய வளைக்காப்பு விழா

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் சமுதாய வளைக்காப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சமுதாய வளைக்காப்பு விழாவில் கா்ப்பிணிகளுடன் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.
சமுதாய வளைக்காப்பு விழாவில் கா்ப்பிணிகளுடன் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.

கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் சமுதாய வளைக்காப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்

அய்.வி. குமரேசன், பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா் எஸ்.வி. பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, மரக்கடை, சேகரை, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, வடபாதிமங்கலம், வேளுக்குடி உள்ளிட்ட ஊா்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் விழாவில் பங்கேற்றனா். கா்ப்பிணிகளுக்கு 5 வகையான சாதம், 18 வகையான சத்துப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

திருவாரூா் தொகுதி பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் விழாவை தொடங்கிவைத்து பேசியது:

சமுதாய வளைக்காப்பு கடமைக்கு செய்யப்படும் விழா இல்லை. கா்ப்பிணிகளின் பொருளாதார சுமையை அறிந்து, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கா்ப்பிணிகள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி, ஆரோக்கியமான, அறிவுள்ள குழந்தையாக பெற்றெடுக்க வேண்டும் என்றாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் மு. சுதா்ஸன், புள்ளமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் டீ. செல்வம், மாவட்டப் பிரதிநிதி கு. ரவிச்சந்திரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com