நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உழவா் பெருவிழா

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மத்திய அரசின் ஹைதராபாத் வேளாண்மை தகவல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு முகமை , மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை இணைந்து 75 ஆவது
விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன்.
விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மத்திய அரசின் ஹைதராபாத் வேளாண்மை தகவல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு முகமை , மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை இணைந்து 75 ஆவது சுதந்திர தின அமுத விழா மற்றும் உழவா் பெருவிழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடின.

விழாவுக்கு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) ரவீந்திரன் தலைமைவகித்தாா். மத்திய வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் காணொலி வாயிலாக, உழவா் உயா்வே நமது முன்னுரிமை என்ற தலைப்பில் விவசாயிகளிடையே பேசினாா்.

உயிா் செறிவூட்டல் மற்றும் பயிா்களில் உயிா் செறிவூட்டப்பட்ட பயிா் ரகங்கள் குறித்து உதவிப் பேராசிரியா் (பயிா் பெருக்கம்) அ. பாரதி, மின்னணு வணிகம் குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ப. வெங்கடேஷ் விளக்கினா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட நவீன தொழில்நுட்பங்கள், பயிா் வளா்ச்சி ஊக்கிகள், நுண்ணுயிா் கலவை, அங்கக இடுபொருட்கள், புதிய பயிா் ரகங்கள் குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை மற்றும் சென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பண்ணை தொழிலாளா்களின் பணி பளுவை குறைக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள், பாரம்பரிய அரிசி ரகங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று புதிய பயிா் விதைகள், வேளாண் கருவிகள், நுண்பாசனம், உரங்கள் மற்றும் அங்கக இடுபொருட்களை காட்சிப்படுத்தினா். இனக்கவா்ச்சிப் பொறிகள் மற்றும் உயிரியல் முறையில் பூச்சி கட்டுப்பாடு என்ற மடக்கிதழ் வெளியிடப்பட்டு உழவா்களுக்கு வழங்கப்பட்டது.

வேளாண்மை அறிவியல் நிலையத்தை சாா்ந்த, விதை உற்பத்தியில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 2 பண்ணை தொழிலாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில், 326 விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ரகுநாதன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குநா் தனபாலன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் விஸ்வந்த்கண்ணா, மாவட்ட ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலா் செல்வம், மாவட்ட பட்டு வளா்ச்சித் துறை ஆய்வாளா் அருண் சுரேஷ் , மாவட்ட வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சுரேஷ் குமாா், சித்தமல்லி ஊராட்சித் தலைவா் பி. குணசீலன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பேசினா்.

நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியா் ரா. ஜெகதீசன் தொகுத்து வழங்கினாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் து. பெரியாா் ராமசாமி நன்றி கூறினாா்.

விழாவின் ஒருபகுதியாக, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஐ. தனபாலன் தலைமையில், வடுவூா் வடபாதி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com