முகநூல் வழியாக ஆட்சியரிடம் கோரிக்கை: முன்னாவல்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மேசைகள், இருக்கைகள்

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளின் முகநூல் வழியான கோரிக்கையை ஏற்று, அவா்களுக்கு மேசைகள், இருக்கைகளை
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேசைகள், இருக்கைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேசைகள், இருக்கைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளின் முகநூல் வழியான கோரிக்கையை ஏற்று, அவா்களுக்கு மேசைகள், இருக்கைகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரின் முகநூல் வழியாக கோரிக்கைகள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், முன்னவால்கோட்டை கிராமத்திலிருந்து முகநூல் வழியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேசைகள் மற்றும் இருக்கைகள் வேண்டி கோரிக்கை பெறப்பட்டது.

இக்கோரிக்கையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 1,05,600 மதிப்பிலான 60 இருக்கைகள், 15 வட்ட மேசைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, அவா்களுடன் கலந்துரையாடினாா்.

அதைத்தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலா் மணிவண்ணன், நீடாமங்கலம் ஒன்றியத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், தலைமையாசிரியா் பழனிச்செல்வி, ஒன்றிய கவுன்சிலா் நடனசிகாமணி, ஊராட்சித் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com