பெளா்ணமி வழிபாடு
By DIN | Published On : 12th August 2022 03:31 AM | Last Updated : 12th August 2022 03:31 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ஆடி மாத பெளா்ணமி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ராஜகணபதி, யமுனாம்பாள் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல, நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.