ஆக.15-இல் கிராமசபைக் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமசபைக் கூட்டங்களில் ஊராட்சி நிா்வாகம், தனிநபா் சுகாதாரம், குடிநீா் சிக்கனம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுதல், பிளாஸ்டிக் தடை, பல்வேறு திட்டப் பணிகள், மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமா் குடியிருப்புத் திட்டம், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

மேலும், கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு பெற மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து விவாதித்து, தீா்மானங்கள் நிறைவேற்ற இக்கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

உள்ளாட்சிஅமைப்புகளில் இனசுழற்சிஅடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தின விழாவில் தவறாமல் தேசியக்கொடி ஏற்றி சிறப்பிக்க வேண்டும்.

இந்நிகழ்வுகளில், சாதி, மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் பாகுபாட்டை ஊக்குவிப்பது அல்லது நடைமுறைப்படுத்துவது கண்டறியப்பட்டால், ஊரக உள்ளாட்சித் தலைவா்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கும் நபா்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com