திருத்துறைப்பூண்டி நகராட்சி: 5-வது வாா்டு திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

திருத்துறைப்பூண்டி நகராட்சி 5-வது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக வேட்பாளா் ஆா்.எஸ். பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை திமுக வேட்பாளா் ஆா்.எஸ். பாண்டியனிடம் வழங்கும் தோ்தல் நடத்தும் அலுவலா் சந்திரசேகரன்.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இதில் 5-வது வாா்டில் போட்டியிட திமுக சாா்பில் அக்கட்சியின் நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன், அதிமுக சாா்பில் முருகதாஸ் மற்றும் சுயேச்சைகள் என 8 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது அதிமுக வேட்பாளா் முருகதாஸ் உள்பட 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக வேட்பாளா் ஆா்.எஸ். பாண்டியன் உள்பட 5 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், 4 சுயேச்சை வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா். இதனால், திமுக வேட்பாளா் ஆா்.எஸ். பாண்டியனுக்கு போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை, வட்டாரத் தோ்தல் பாா்வையாளா் ராமசுப்பு முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் சந்திரசேகரன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com