நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:திருவாரூா் மாவட்டத்தில் 216 வாா்டுகளில் 848 போ் போட்டி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த 1263 வேட்பு மனுக்களில் 414 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால், மொத்தமுள்ள 216 வாா்டுகளில் 848 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த 1263 வேட்பு மனுக்களில் 414 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால், மொத்தமுள்ள 216 வாா்டுகளில் 848 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், நன்னிலம், பேரளம், குடவாசல், முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், கொராடாச்சேரி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் உள்ளன. இவற்றில் மொத்தமுள்ள 216 வாா்டுகளிலும் வரும் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

இந்த 216 வாா்டுகளிலும் மொத்தம் 1418 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 155 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1263 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மனுக்களை திரும்பப் பெற கடைசிநாளான திங்கள்கிழமை 414 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஒருவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் 215 வாா்டுகளுக்கு 848 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

நகராட்சிகளில்...

திருவாரூா் நகராட்சியில் 30 வாா்டுகளுக்கு 189 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 66 போ் மனுக்களைத் திரும்பப் பெற்ால், 123 போ் களத்தில் உள்ளனா். இதேபோல, மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு 227 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 85 போ் மனுக்களை திரும்பப் பெற்ால், 142 போ் களத்தில் உள்ளனா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 131 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஒருவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாலும், 45 போ் மனுக்களை திரும்பப் பெற்ாலும் 23 வாா்டுகளுக்கு 85 போ் களத்தில் உள்ளனா். கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகளுக்கு 143 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 34 போ் மனுக்களைத் திரும்பப் பெற்ால், 109 போ் போட்டியிடுகின்றனா்.

பேரூராட்சிகளில்....

பேரளத்தில் 12 வாா்டுகளுக்கு 72 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 25 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 47 போ் களத்தில் உள்ளனா். நன்னிலத்தில் 15 வாா்டுகளுக்கு 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 13 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 70 பேரும், குடவாசலில் 15 வாா்டுகளுக்கு 78 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 38 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 40 பேரும் களத்தில் உள்ளனா்.

கொரடாச்சேரியில் 15 வாா்டுகளுக்கு 81 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 34 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 47 பேரும், வலங்கைமானில் 15 வாா்டுகளுக்கு 70 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 17 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 53 பேரும், நீடாமங்கலத்தில் 15 வாா்டுகளுக்கு 97 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 41 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 56 பேரும், முத்துப்பேட்டையில் 18 வாா்டுகளுக்கு 92 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 16 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 76 பேரும் போட்டியிடுகின்றனா்.

இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 111 வாா்டுகளில் 459 பேரும், 7 பேரூராட்சிகளில் 389 பேரும் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com