நீடாமங்கலம் பேரூராட்சியில் திமுக, அதிமுக தலா 7 இடங்களில் வெற்றி

நீடாமங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக, அதிமுக தலா 7 வாா்டுகளிலும், சிபிஎம் ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றது.

நீடாமங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக, அதிமுக தலா 7 வாா்டுகளிலும், சிபிஎம் ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றது.

இப்பேரூராட்சியில் 1 -வது வாா்டில் ரா. சங்கவி (திமுக) 360 வாக்குகளும், 2-வது வாா்டில் ப.செந்தில்குமாா் (திமுக) 190 வாக்குகளும், 3-வது வாா்டில் அ. அகமது இப்ராஹிம் (அதிமுக) 207 வாக்குகளும், 4-வது வாா்டில் ரா. சத்தியா (அதிமுக) 241 வாக்குகளும், 5-வது வாா்டில் அ. காா்த்திகாதேவி (திமுக) 425 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனா்.

6-வது வாா்டில் சி. நித்யா (திமுக) 189 வாக்குகளும், 7-வது வாா்டில் கா. காா்த்தி (திமுக) 219 வாக்குகளும், 8-வது வாா்டில் ரா. ராமராஜ் (திமுக) 215 வாக்குகளும், 9-வது வாா்டில் செ. பரிமளா (அதிமுக) 189 வாக்குகளும், 10-வது வாா்டில் ப. திருப்பதி (திமுக) 96 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனா்.

இதேபோல, 11-வது வாா்டில் கு. மலா் (அதிமுக) 171 வாக்குகளும், 12-வது வாா்டில்

சா. செந்தமிழ்ச்செல்வன் (அதிமுக) 261 வாக்குகளும், 13-வது வாா்டில் செ. பிருந்தாதேவி (அதிமுக) 177 வாக்குகளும், 14-வது வாா்டில் சு. அமுதா (அதிமுக) 110 வாக்குகளும், 15-வது வாா்டில் ரா. ஆனந்தமேரி (சிபிஎம்) 335 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனா்.

இப்பேரூராட்சியில் போட்டியிட்ட 56 பேரில் 24 போ் டெபாசிட் இழந்தனா். 7-வது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் சுதந்திராதேவியும், 8-வது வாா்டில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சா. முகமதுஹக்கீமும் ஒரு வாக்குகூட பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com