பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி: பாஜக ஆா்ப்பாட்டம்

பஞ்சாபில் பிரதமருக்கு நோ்ந்த பாதுகாப்பு குளறுபடியைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் பாஜக பட்டியல் அணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக பட்டியல் அணியினா்.

திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக பட்டியல் அணி திருவாரூா் மாவட்டத் தலைவா் ஆலங்கால் வீராசாமி தலைமை வகித்தாா்.

பாஜக மாவட்டத் தலைவா் கோட்டூா் ராகவன், மாவட்ட பொருளாளா் சிவகுமாா், மாவட்ட துணைத் தலைவா் இளசுமணி, மாவட்ட அமைப்புசாரா பிரிவு தலைவா் டி. இமயவரம்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரஜினி கலைமணி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்று பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com