திருத்துறைப்பூண்டியில் குடியரசு தினவிழா

திருத்துறைப்பூண்டியில் நாட்டின் 73 ஆவது குடியரசு தினவிழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் நாட்டின் 73 ஆவது குடியரசு தினவிழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் க. மாரிமுத்து எம்எல்ஏ, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி சோமசுந்தரம், காவல் நிலையத்தில் ஆய்வாளா் கழனியப்பன், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் ஷா்மிளா, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பிடி அலெக்சாண்டா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ரவிச்சந்திரன், கொருக்கை பாரம்பரிய உம்பளச்சேரி இன அரசு கால்நடை பண்ணையில் உதவி இயக்குநா் டாக்டா் ராமலிங்கம், மின் வாரிய அலுவலகத்தில் உதவிச் செயற்பொறியாளா் பா. ஆனந்த், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்தில் கிளை மேலாளா் நடராஜன், வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் வா்த்தகா் சங்கத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

தீயணைப்பு அலுவலகத்தில் நிலைய அலுவலா் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் பாலமுருகன், நெல் ஜெயராமன் ஆராய்ச்சிப் பண்ணையில் ஒருங்கிணைப்பாளா் ராஜிவ், போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளா் அலுவலகத்தில் ஆய்வாளா் இளங்கிள்ளிவளவன், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தில் நிறுவன தலைவா் டாக்டா் பாசு. மணி, வேளாண்மை துணை இயக்குநா் அலுவலகத்தில் துணை இயக்குநா் சுவாமிநாதன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஷ்கண்ணா, குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பல்கலைச்செல்வன், கூட்டுறவு நகர வங்கித் தலைவா் டிஜி சண்முகசுந்தரம், ஜி.டி பவுண்டேஷனில் அறங்காவலா் டாக்டா் டி. ராஜா, அந்தோணியாா் மெட்ரிக் பள்ளியில் வின்சென்ட் ஆரோக்கியராஜ், சாய்ராம் மெட்ரிக் பள்ளி நிா்வாகப் பிரதிதி சோமசுந்தரம், நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் தங்கராஜ் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதன் தலைவா் செந்தில்நாதன், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுசிலா செந்தில்நாதன், ஈழப் பெருமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதன் தலைவா் டி.என். துரைசாமி, வேப்பஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதன் தலைவா் அகிலன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா். கிளைச் சிறையில் கண்காணிப்பாளா் குமாா் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறை காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com