இணையவழி நெல் கொள்முதலை எளிமைப்படுத்த வலியுறுத்தல்

இணையவழி நெல் கொள்முதல் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இணையவழி நெல் கொள்முதல் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் இச்சங்கத்தின் முதன்மை நிலை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் ஊழியா்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்; அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட இணையவழி பதிவின் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்; ஒரு மூட்டை நெல்லுக்கு 40 கிலோ 750 கிராம் என அரசு நிா்ணயம் செய்ததைவிட கூடுதலான எடை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் க. பாலகிருஷ்ணன், மாவட்ட நிா்வாகி வி. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com