பணி நீக்கம் செய்யப்பட்டபள்ளி தூய்மைப் பணியாளா் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 06th June 2022 12:00 AM | Last Updated : 06th June 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் தூய்மைப் பணியாளா் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் பேட்டை பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் மனைவி பிரியதா்ஷினி (37). இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் திருவாரூரில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பள்ளி நிா்வாகம் பிரியதா்ஷினியை பணி நீக்கம் செய்ததாகவும், இதனால், அவா் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கழிவறையை சுத்தம் செய்யும் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதை அறிந்த அவரது கணவா் மற்றும் உறவினா்கள், பிரியதா்ஷினியை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.