50% நிதியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் தகவல்

அனைத்து நகராட்சிகளுக்கும் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் வரப்பெற்று, பணிகள் நடைபெற்றுவருகின்றன
50% நிதியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நகராட்சிகளின் நிா்வாக  இயக்குநா் தகவல்

அனைத்து நகராட்சிகளுக்கும் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் வரப்பெற்று, பணிகள் நடைபெற்றுவருகின்றன என்று நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் தமிழக நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘இங்கு ரூ. 35 கோடி அளவுக்கு சாலைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ச்சியாக மூலதன மானிய நிதி, சாலை மேம்பாட்டுத் திட்ட நிதி வரவுள்ள நிலையில், திருவாரூா் நகராட்சி சிறப்பான நிலையை அடையும். கடந்த ஓராண்டில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகா்ப்புற உள்ளாட்சி துறைக்கு ரூ 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் நகராட்சிகளுக்கு வரப்பெற்று, பணிகள் நடைபெறுகின்றன’ என்றாா்.

முன்னதாக, புதிய பேருந்து நிலைய சாலை மற்றும் பழைய பேருந்து நிலைய சாலை ஆய்வின்போது, சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது குறித்து அலுவலா்களிடம் கேள்வி எழுப்பினாா்.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மன்னை ப.நாராயணசாமி நகா் நகராட்சி பூங்கா,

குப்பைக் கிடங்கு, காமராஜா் பேருந்து நிலையம், கீழராஜவீதியில் காய்கறி அங்காடி அமைக்கப்பட உள்ள இடம், ருக்மணி குளம், நவீன டிஜிட்டல் நூலகம் அமையவுள்ள இடம் ஆகிய பகுதிகளில் நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

முன்னதாக, மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா். ஆய்வின்போது, மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் ஜானகி ரவீந்திரன், நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா்.கைலாசம், ஆணையா் கே.சென்னுகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் நகராட்சி பேருந்து நிலையத்தில் நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, துணைத் தலைவா் மு. சுதா்ஸன், ஆணையா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com