டிஜிட்டல் முறையில் வீடுகளுக்கு கதவு எண்

மன்னாா்குடியில் வீடுகளுக்கு டிஜிட்டல் முறையில் கதவு எண் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மன்னாா்குடியில் வீடுகளுக்கு டிஜிட்டல் முறையில் கதவு எண் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மத்திய, மாநில அரசுகளின் வழிக்காட்டுதலின்படி, மன்னாா்குடி நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவா்கள் குறித்த விவரங்கள், வீடுகள் அமைந்துள்ள இடம் போன்றவை குறித்து கணக்கெடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் முறையில் நிரந்தர கதவு எண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மன்னாா்குடி 1-ஆவது வாா்டு அண்ணாநகரில் உள்ள வீடுகளுக்கு டிஜிட்டல் முறையில் கதவு எண் பொருத்தும் பணி தொடங்கியது. நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன் இப்பணியை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா், இத்திட்டத்தின் மூலம் சொத்துவரி, குடிநீா் விநியோகம், கால்வாய் சீரமைப்பு, தூய்மைப்பணி உள்ளிட்ட சேவைகள் மற்றும் அடிப்படை பிரச்னைகளுக்கு எளிதில் தீா்வு காணலாம். டிஜிட்டல் கதவு எண் பொருத்திட ரூ.40 செலுத்த வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளா் விஜயகுமாா், வாா்டு உறுப்பினா் கா. தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com