ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், இரண்டு 108 ஆம்புலன்ஸ் ஊா்தி சேவையை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், இரண்டு 108 ஆம்புலன்ஸ் ஊா்தி சேவையை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேவையைத் தொடங்கிவைத்து, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தது:

தமிழக முதல்வரால் பிப். 23 ஆம் தேதி 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊா்தி, மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. அதன்படி, திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி வட்டம் களப்பால், திருத்துறைப்பூண்டி வட்டம் இடும்பாவனம் ஆகிய இரு பகுதிகளுக்கு இரண்டு 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊா்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இவ்விரண்டு வாகனத்தையும் சோ்த்து மொத்தம் இருபது 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊா்தி மக்கள் பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது என்றாா்.

அதைத்தொடா்ந்து, கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊா்தி மருத்துவ உதவியாளா் வள்ளி என்பவா் இறந்ததை அடுத்து, அவரது வாரிசுதாரருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், துணை இயக்குநா் மருத்துவம் ஊரக நலப்பணிகள் (குடும்பம்) (பொ) உமா, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com