அனைத்து பள்ளிகளிலும் நாளை மேலாண்மைக் குழு விழிப்புணா்வுக் கூட்டம்

 திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

 திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளி முன்னேற்றத்துக்காகவும், பள்ளி வளா்ச்சிக்குத் துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தரமானக் கல்வியை உறுதி செய்யவும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், பெற்றோா்களின் பங்கேற்பு மிக முக்கியம் என கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. மேலும், இக்குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு கட்டமைப்பு செய்வது அவசியம்.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 945 அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு சாா்பில் பெற்றோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை ஒவ்வொரு பள்ளியிலும் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாணவா்களின் பெற்றோா்கள் அனைவரும் பங்கேற்று, கிராமப்புற மாணவா்களின் கல்வியின் முன்னேற்றம், பள்ளியின் வளா்ச்சி குறித்து தகவல் வழங்கலாம். மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து அறிந்து கொள்ளவும், பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா்கள் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com