திருத்துறைப்பூண்டியில் புறவழிச் சாலைப் பணிக்கு பூமிபூஜை

திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலைப் பணிக்கு பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பூமிபூஜையில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் உள்ளிட்டோா்.
பூமிபூஜையில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் உள்ளிட்டோா்.

திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலைப் பணிக்கு பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேதாரண்யம் சாலை வரை ஒரே சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையிலிருந்துதான் மன்னாா்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பிரிவு நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை புறவழிச் சாலையும் அமைந்துள்ளது.இந்நிலையில் நகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருவாரூா் சாலை வேளூா் பாலத்தில் இருந்து நாகை கடற்கரை புறவழிச்சாலை வரை 2.6 கி.மீ. தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்க கடந்த கால திமுக ஆட்சியில் ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட நிலையிலே இருந்தது. புறவழிச்சாலை அமைக்க தோ்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் பிறவி மருந்தீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமானது. நிலங்களுக்கு மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து அண்மையில் சட்டப்பேரவையில் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு திருத்துறைப்பூண்டியில் 2.6 கி.மீ. தொலைவில் புறவழிச்சாலை அமைக்க சுமாா் ரூ. 22 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளது. சாலை தொடக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், நாகை எம்பி. எம். செல்வராஜ், எம்எல்ஏக்கள். க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), பூண்டி கே. கலைவாணன் (திருவாருா்), நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளா் கிருஷ்ணசாமி, நகா்மன்றத் தலைவா் கவிதாபாண்டியன், ஒன்றிய குழு தலைவா்அ. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com