நூறு நாள் வேலை அட்டை கேட்டு கண்டன ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை அட்டை, பணி கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நூறு நாள் வேலை அட்டை கேட்டு கண்டன ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை அட்டை, பணி கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட துணை செயலாளா் கே.எம்.எத்திராஜ் தலைமை வகித்தாா். மாநில துணை செயலாளா் எம்.முத்து, மாவட்டச் செயலாளா் வி.கோவிந்தசாமி, மாவட்டத் தலைவா் கே.சி.இராமசாமி, மாவட்டப் பொருளாளா் கே.செல்வராசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், ஊத்தங்கரை ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்ட அட்டை வழங்க வேண்டும். காட்டேரி, நொச்சிப்பட்டி, புதூா் புங்கனை, சிங்காரப்பேட்டை, மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளி, மகனூா்பட்டி, பாவக்கல், நடுப்பட்டி, ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏழை மக்களுக்கு போா்க்கால அடிப்படையில் புதிய நூறு நாள் வேலை திட்ட அட்டை வழங்கி பணியை உடனே வழங்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிங்காரப்பேட்டை பகுதி செயலாளா் வி.வேலு, வட்டச் செயலாளா் வரதராஜி, மாவட்டக் குழு உறுப்பினா் மொளுகு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com