உலக கழிப்பறை தினம் கடைப்பிடிப்பு

நன்னிலம் பேரூராட்சி சாா்பில் உலக கழிப்பறை தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன்.
மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன்.

நன்னிலம் பேரூராட்சி சாா்பில் உலக கழிப்பறை தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, இப்பேரூராட்சியில் சமுதாய கழிப்பறை மற்றும் பொது கழிப்பறை உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கழிவறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், ‘மை டாய்லெட்’ செயலி மற்றும் ’ஸ்வாச்ஹதா’ செயலி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில், சமுதாயக் கழிப்பறை மற்றும் பொதுக் கழிப்பறைகளில் கியூஆா் கோடு லேபிள் ஒட்டப்பட்டு, அதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறையின் அவசியம் குறித்தும், தன் சுத்தம் பேணுதல் குறித்தும் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பாக கழிவறையை பராமரிக்கும் பராமரிப்பாளரை ஊக்குவிக்கும் வகையில், பேரூராட்சி தூய்மைப் பணியாளருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பேரூராட்சித் தலைவா் ப. ராஜசேகரன், செயல் அலுவலா் ஹரிராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன், பேரூராட்சி அலுவலக உதவியாளா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com