நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்: கண்டித்து சாலை மறியல்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்: கண்டித்து சாலை மறியல்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு ஏரி, கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கு திடல் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தநிலையில் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து,

ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு முன்அறிவிப்பு கொடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனாமணி, வட்டாட்சியா் ஜி. மலா்க்கொடி ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் காவல்துறை பாதுகாப்புடன் நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

அதிகாரிகள் இந்த நடவடிக்கையை தடுக்க முயன்ற அதிமுக ஒன்றிய செயலாளா் கே. சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினா் வேதரெத்தினம் உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோா் தலைமையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயில் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

அவா்களை முன்னாள் அமைச்சா் ஆா் . காமராஜ், அதிமுக அமைப்பு செயலாளா் சிவா ராஜமாணிக்கம் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com