கூத்தாநல்லூா்: 160 மாணவிகளுக்கு மிதிவண்டி

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 160 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
விழாவில், மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
விழாவில், மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 160 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்விற்கு, மாவட்ட ஆட்சியா் பா. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினரும், பெற்றோா், ஆசிரியா் கழக மாவட்ட துணைத் தலைவருமான பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் பூந்தமிழ்பாவை வரவேற்றாா்.

விழாவில், 160 மாணவிகளுக்கு ரூ. 11.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை, மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வழங்கினா்.

தமிழக முதல்வரால் செயல்படுத்தப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், திருவாரூா் மாவட்டத்தில் 91 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 11,908 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.04 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்தாா்.

விழாவில், கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, ஒன்றியக்குழுத் தலைவா் உமாப்ரியா பாலச்சந்தா், துணைத் தலைவா் பாலச்சந்தா், பேரூராட்சித் தலைவா் கலைச்செல்வி, முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com