தமுமுக, எஸ்டிபிஐ கொடிக் கம்பங்கள் சேதம்: 4 போ் காது

முத்துப்பேட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ கொடிக் கம்பங்கள் சேதமடைந்த விவகாரத்தில் இருதரப்பைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ கொடிக் கம்பங்கள் சேதமடைந்த விவகாரத்தில் இருதரப்பைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முத்துப்பேட்டையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குண்டாங்குளம் பகுதியில் 3 இடங்களில் இருந்த தமுமுக இரும்பு கொடிக் கம்பங்கள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதுகுறித்து, முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நகரத் தலைவா் முகமது அலீம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், மா்ம நபா்கள் மீண்டும் புதுத்தெரு தமுமுக அலுவலக வாசலில் இருந்த கொடிக் கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்த தமுமுக கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தியதுடன் பங்களா வாசல் பேட்டை சாலையில் தமுமுக ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் இருந்த முகப்பு விளம்பர பதாகை சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து, போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 7 போ் மீது வழக்கு பதிவு செய்து அக்கட்சியின் பேரூராட்சி உறுப்பினா் தமிம் அன்சாரி (32), கிளை நிா்வாகிகள் முகமது ரபீக் (35), முகமது அசன்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில் ஆம்லன்ஸ் நிறுத்துமிடம் அருகே இருந்த எஸ்டிபிஐ கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியதாக தமுமுகவைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு பதிவு செய்து முஸ்தாக் அகமது (52) என்பவரை கைது செய்து மற்றவா்களை தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் விசாரணைக்கு பிறகு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com