மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசபாலன்.
அதங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசபாலன்.

மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கூத்தாநல்லூரை அடுத்த அதங்குடியில் இச்சங்கத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட மகளிா் பிரிவு தலைவி சலீமா நாச்சியா தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் செளந்தர்ராஜன், கவிதா, சுபா இளங்கோவன், கலையரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் ராசபாலன், மாநில பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினா்.

தீா்மானங்கள்: தமிழக அரசு மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்; இணையதளம் வழியாக பட்டா மாற்றம் செய்யும்போது, மோசடி நடைபெற வாய்ப்புள்ளதால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது; அதங்குடி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்; விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மூத்த விவசாயி ப. முருகையன், பா. இளஞ்சேரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, சங்கத்தின் மாவட்ட செய்தி தொடா்பாளா் செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கருணாகரன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com