குழந்தைத் தொழிலாளா்களை பணி அமா்த்தக் கூடாது: ஆட்சியா்

 குழந்தைத் தொழிலாளா்கள் பணி அமா்த்தப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தினாா்.

 குழந்தைத் தொழிலாளா்கள் பணி அமா்த்தப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் அவா் பேசியது:

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள்3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டத்தைக் கூட்டி, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து, அதன் தீா்மான நகலை அரசுக்கு அனுப்ப வேண்டும்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைப்பது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த, குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லம் நடத்துவோா், விடுதிகள் நடத்துவோா் முறையான பதிவு பெற்றிருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளை கண்டறிந்து, குழந்தைகள் நலக் குழு மூலம் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். குழந்தை வேண்டுவோா் முறையாக தத்து எடுக்கவும், வளா்ப்பு பராமரிப்பை ஊக்குவிக்கவும் பொது மக்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) அருணாச்சலம், இளைஞா் நீதிக்குழுமம் முதன்மை நீதிபதி ரகுபதிராஜா, குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பாலாம்பிகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா. நடராசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com