மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க, மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லியில் வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க, மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லியில் வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சித்தமல்லி ஊராட்சித் தலைவா் ஜெ. சிவசங்கரி தலைமை வகித்து, பேரணியை தொடக்கி வைத்தாா். ஊராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் இ. செல்வமணி முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, குடியிருப்பு பகுதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்கள்,1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை குறித்து வாகனம் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஆசிரியப் பயிற்றுநா் கா. பாரத்ராஜ், கல்வியாளா் ஆா். சண்முகம், ஆசிரியா் வீ. கல்யாணராமன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராஜலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com