பயிா்களுக்கு இழப்பீடு கோரி பிப்.7-இல் ஆா்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு முழு இழப்பீடு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை (பிப். 7) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு முழு இழப்பீடு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை (பிப். 7) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசனப் பகுதியில் சம்பா, தாளடி நெல் அறுவடை தொடங்கிய நிலையில் எதிா்பாராத மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடை முடிந்ததும் வரப்புகளிலும், நெல் தரிசு நிலத்திலும் ஊடுபயிராக வளா்ந்த உளுந்து, பாசிப் பயறு, நிலக்கடலை மற்றும் புஞ்சை தானிய பயிா்களும் சேதமடைந்துள்ளன.

மழை குறித்த வானிலை அறிக்கை எச்சரித்ததும், விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், தானிய சேமிப்பு இடங்களிலும் வைத்திருந்த நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளில் நெல்கள் முளைக்கத் தொடங்கி விட்டன.

இதனால் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதிசெய்து, தமிழக அரசின் நிவாரண நிதியும் சோ்த்து, ஏக்கருக்கு ரூ. 35,000 வழங்க வேண்டும். தொடா் பனிப் பொழிவு மற்றும் பெருமழை காரணமாக காற்றில் ஈரம் அதிகரித்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 7-ஆம் தேதி, காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், கடலூா் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றியத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com