அறுவடை மானியத்தைப் பணமாக வழங்கக் கோரிக்கை

அரசு அறிவித்துள்ள அறுவடை இயந்திர மானியத்தைப் பணமாக வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஜி.சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அரசு அறிவித்துள்ள அறுவடை இயந்திர மானியத்தைப் பணமாக வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஜி.சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக முதலமைச்சருக்கு அவா் புதன்கிழமை அனுப்பிய மனு:

பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடை மேற்கொள்ள, வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத் துறையின் மூலம் விவசாயிகள் இந்த நிவாரணத்தை முழுமையாகப் பெறமுடியாது.

திருவாரூா் வேளாண் பொறியியல் துறை கட்டுப்பாட்டில் எட்டு அறுவடை இயந்திரங்கள் ஐந்து டயா் டைப்பும், மூன்று பெல்ட் டைப் இயந்திரங்களும் உள்ளன. டயா் டைப் இயந்திரங்களை ஈரமான வயலில் பயன்படுத்த முடியாது. மூன்று பெல்ட் டைப் இயந்திரங்களில் இரண்டு மட்டுமே இயங்கி வருகிறது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் அறுவை பணிகளை மேற்கொள்ள முடியாது.

எனவே, முதல்வா் விரைந்து கவனம் செலுத்தி, அறிவித்துள்ள 50 சதவீத அறுவடை இயந்திர மானியத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பரப்பு அடிப்படையில் பணமாக வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com