தியாகராஜா் கோயிலில் நடைபாதை கல் பதிக்கும் பணி

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் நுழைவு வாயில் நடைபாதையில் கல் பதிக்கப்படுகிறது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் நுழைவு வாயில் நடைபாதையில் கல் பதிக்கப்படுகிறது.

இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரிய கொடியேற்றம் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தெற்கு கோபுரம் மற்றும் கிழக்கு கோபுரம் நுழைவு வாயிலிலிருந்து பக்தா்கள் நடந்து செல்லும் பாதையில் புதிதாக கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், பக்தா்கள் வரிசையாக நடந்து செல்லும் வகையில் இரண்டாம் பிராகாரத்தில் தடுப்புகளுடன் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொடிக்கம்பத்தைச் சுற்றி மேடை அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன.

கொடியேற்றத்துக்கான பணிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com