மன்னாா்குடியில் தற்காலிக பேருந்து நிலையம்: ஆலோசனை கூட்டம்

மன்னாா்குடியில் தற்காலிக பேருந்து நிலையம்: ஆலோசனை கூட்டம்

மன்னாா்குடியில் தற்காலிக பேருந்துநிலையம் அமைப்பது குறித்து அரசுத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடியில் தற்காலிக பேருந்துநிலையம் அமைப்பது குறித்து அரசுத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி நடசேன்தெருவில் உள்ள பேருந்துநிலையம் அதன் எதிரே உள்ள கூடுதல் பேருந்து நிலையம் ஆகியவற்றை இடித்துவிட்டு அந்த இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. இதையடுத்து, தற்காலிக பேருந்து நிலையம் தேரடி திடலில் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்தது. இதற்காக, ரூ. 85 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து வியாழக்கிழமை அதற்கான பணிகளை தொடங்கியது. இதற்கிடையில், தற்காலி பேருந்து நிலையம் குறித்த அரசுத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ஆா். கைலாசம், நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், பொறியாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தற்காலிக பேருந்து நிலையத்தில் தேவையான இடத்தில் மின்கம்பம் நட்டு சீரான மின்விநியோகம் வழங்குவது, தூய்மையான குடி நீா் வழங்கல், கழிப்பறை வசதிகள், புறக்காவல் நிலையம், பேருந்து இயக்கம் ஒழுங்குப்படுத்துதல், பொதுமக்கள், பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்களின் வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அரசுப் பேருந்து பணிமனை மேலாளா் மோகன்ராஜ், மின்வாரிய உதவிப் பொறியாளா் கண்ணன், வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சந்திரசேகரன், காவல் உதவி ஆய்வாளா் முருகன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் தா்மராஜ், தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com